வருவாய் கிராமங்களில் காலி பணியிடங்கள் இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிராம உதவியாளர் பணிக்கான மொத்த காலிப் பணியிடங்கள் 2,299 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரங்கள்: கிராம உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 2,299 காலிப்பணியிடங்கள்
வயது: 21 – 32 வரை
(குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது தளர்வுகள் அளிக்கப்படும்)
சம்பள விவரம்: ரூ. 11,000–35,000 வரை
என்னென்ன கல்வி தகுதிகள்:
பத்தாம் வகுப்பு
(பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மற்றும் பெறாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்)
குறிப்பு: கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த வட்டத்தை சார்ந்தவராக கட்டாயம் இருத்தல் வேண்டும். தமிழில் பிழையின்றி எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பது அவசியம். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
மேலும், நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஆகஸ்ட் 5, 2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.
அந்தந்த மாவட்ட வலைதள பக்கத்தில் எந்த பணிக்கான விண்ணப்பத்தை நகலெடுத்து பூர்த்தி செய்து பின் மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 5 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.