சிம்லா: இமாச்சலப் பிரதேசங்களில் பருவ மழை காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. சிம்லா, மாண்டி என்ற ஊரில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது சரியான நேரத்தில் அங்கிருந்த நாய் ஒன்று குறைத்து கொண்டே இருந்ததனால் நிலச்சரிவு எச்சரிக்கை என 65 பேர் தப்பியுள்ளனர்.
கனமழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி வருகிறது. சமீபத்தில் மாண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போது நாய் ஒன்று குறைத்து அபாயத்தை உணர்த்தியதால் 20 குடும்பங்கள் சரியான நேரத்தில் உயிர் தப்பினர்.
ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை இடைவிடாது பெய்த மழையால் நிலச்சரிவால் சியாத்தி என்ற கிராமம் தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக 67 பேர் உயிர் தப்பி உள்ளனர். சியாத்தி கிராமத்தை சேர்ந்த நரேந்திரா கூறிய போது, இரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தபோது இரண்டாவது மாடியில் உறங்கிக் கொண்டிருந்த நாய் சத்தமாக குரைத்தது.
நாய் குறைத்துக் கொண்டிருப்பதை உரிமையாளர் சென்று பார்த்த போது சுவரில் விரிசல் விழுந்து இருப்பதை கண்டு அனைவரையும் எழுப்பினார். வீட்டிற்குள் தண்ணீர் வருவதையும் பார்த்து அனைவரையும் எச்சரிக்கை செய்தார்.
தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிறிது நேரத்திலேயே கிராமம் தரைமட்டமானது. நிலச்சரிவில் 10 வீடுகளுக்கும் மேல் தரைமட்டமாகின. கிராமத்தில் உள்ள வெறும் 5 வீடுகள் மட்டுமே பாதிப்புகள் ஏற்படாமல் இருந்தது. கடந்த 7 நாட்களாக திரியம்பாலா கிராமத்தில் நைனா தேவி கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர் உயிர் பிழைத்தவர்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருகில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த மக்கள் உதவி செய்து வருகின்றனர். மேலும் அரசாங்கம் சார்பில் பத்தாயிரம் உதவித்தொகை வழங்க உள்ளது. ஜூன் 2 இருபதாம் தேதி தொடங்கிய மழையில் இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் குறைந்தது 78 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு 50 பேர் உயிரிழந்து உள்ளனர். கனமழையால் சாலை விபத்துகளில் 28 பேர் உயிரிழந்து உள்ளன. 16 இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் 19 இடங்களில் மேக வெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.