பெண் சார் பதிவாளரை அறையில் வைத்து பூட்டி பத்திரப்பதிவு!! அதிமுக பிரமுகரின் அராஜகம்!! ஆறு பேர் கைது!!

Violation of AIADMK figure
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் திருநாவலர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றும் லோக நாயகி என்பவர் பத்திரப்பதிவுக்கு போதுமான ஆவணங்கள் இல்லாததால் பத்திரப்பதிவு செய்ய மறுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,  திருநாவலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளராக இருப்பவர் உலோக நாயகி. சம்பவத்தன்று உளுந்தூர்பேட்டைக்கு அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் மற்றும் அதிமுக ஒன்றிய பேரவை செயலாளர் தவிடன் போன்ற பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று உள்ளனர்.
அவர்களுடன் மேலும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பத்திர எழுத்தாளர் அன்பழகன் மற்றும் பாமக மாநில நிர்வாகி வக்கீல் சுரேஷ் குமார் உள்ளிட்ட 20 பேர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று  உள்ளனர். சார் பதிவாளரிடம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள இடத்தை பாதூர் கிராமத்தை சேர்ந்த நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்கள். பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை கேட்ட போது அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாதது குறித்து லோகநாயகி கூறியுள்ளார்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் பத்திர பதிவு செய்து தர முடியாது, விடுமுறையில் சார்பதிவாளர் சென்றுள்ளதாகவும், வந்த பிறகு பத்திரப்பதிவு செய்து கொள்ளுங்கள் என்று  சார்பதிவாளர் கூறியுள்ளார். தவிடன் மற்றும் உடன் இருந்தவர்கள் தற்போது பதிவு செய்ய வேண்டும் என மிரட்டி உள்ளனர்.
லோகநாயகி வெளியே செல்ல முயன்றதால் அறையின் கதவை பூட்டி உள்ளனர். பத்திர பதிவு செய்யாமல் இங்கிருந்து செல்ல முடியாது என அவரை தாக்க முயற்சித்துள்ளனர். ஊழியர் பழனி என்பவர் சமாதானம் செய்ய முயன்ற போது ஆத்திரமடைந்த தவிடன் உள்ளிட்டவர்கள் பழனியை தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து லோகநாயகி வேறு வழியின்றி பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
பின் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் தன்னை மிரட்டி பத்திர பதிவு செய்தது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தவிடன், பிரான்சிஸ், அம்புரோஸ், அன்பழகன், ஏசுதாஸ், அந்தோணி ராஜ் ஆகியோரை  போலீசார் விசாரணையின் பேரில் கைது செய்தது. மேலும், அவர்களுடன் வந்த 16 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram