அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் கழகம் 6000 அமெரிக்க பெண்களை வைத்து பல ஆண்டுகளாக ஆராய்ந்து இரண்டு அரிய வழிகளை கண்டுபிடித்து கூறியுள்ளனர்.
இவற்றில் முக்கியமாக அவர்கள் தூக்கத்தையும் உடற்பயிற்சியும் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள். உடற்பயிற்சி செய்து வந்தால் புற்றுநோயையும் தடுக்கலாம்.
நன்கு தூங்கினால் இதய நோயையும் கொழுத்த சரீரம் பக்கவாதம் நீரிழிவு போன்ற நோய்களையும் முற்றிலும் தவிர்த்துக் கொள்ளலாம் என்று அந்த வல்லுநர்கள் கூறினார்கள்.
இந்த ஆய்வின் மூலம் தேசிய புற்றுநோய் கழகத்தை சேர்ந்தவர் தலைமையில் அந்த குழு அமைப்பில் உள்ள உண்மைகளை கண்டுபிடித்து கூறியுள்ளார்.
உடற்பயிற்சி செய்வதால் உடல் எடையை குறைக்க முடியும்.
உடல் எடையை குறைத்தாலே பலவிதமான நோய்கள் உங்களை விட்டு போய்விடும். தேவையற்ற கொழுப்புகள் தேங்கிருப்பதால் மட்டுமே பல்வேறு வகையான நோய்கள் உடலில் ஏற்பட்டு மரணம் அடைய செய்கிறது. உடற்பயிற்சி செய்வதால் தேவையான தக்க அளவில் சுரந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது இதனால் உடலை ஆற்றலுடன் வைக்க முடிகிறது தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி 25% உண்டாகிறது இதனால் புற்றுநோய் வருவதையும் தடுத்து விடுகிறது. தொடரும் உடற்பயிற்சியால் புற்றுநோயை நாம் கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகிறார்.
ஒரு நாளைக்கு ஏழரை மணி நேரத்துக்கு குறைவாக தூங்கினால் வளர்ச்சிதை பாதிக்கப்படுவதால் உடலில் கொழுப்பு அதிகமாக சேர ஆரம்பித்து விடுகிறது.
இதனால் உடல் எடை அதிகமாக இருக்கிறது இதயம் சீராக துடிக்க முடியாமல் தடுமாறுகின்றது
நன்கு தூங்கும் மனிதர்கள் 47 சதவீதம் புற்றுநோய் அபாயம் இல்லை.
எனவே காலையோ மாலையோ 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் இரவு ஆழ்ந்து தூங்கும் விதத்தில் கால்சியம் உள்ள பால் சப்பாத்தி போன்றவற்றை அளவுடன் சாப்பிட்டு நன்றாக 8 மணி நேரம் தூங்க வேண்டும் வீட்டு வேலைகளை செய்யும் பெண்களுக்கு எந்த நேரமும் பணம் பணம் என்று உழைத்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் மிகவும் நல்லது
வாழ்வில் தினந்தோறும் அரை மணி நேரம் உடற்பயிற்சியையும் 8 மணி நேர தூக்கத்தையும் கொண்டவர்கள் எந்த ஆபத்தும் வரப்போவதில்லை இதனால் கவனமாக இருந்தால் முதல் கட்டமாக உடல் பருமன் ஆவதை தடுக்கலாம் இதனால் ஆயுளையும் அதிகரிக்கலாம் உடல் பருமனாகி இதய நோய் ஏற்பட்டு பலரும் பெரும் அளவில் மரணம் அடைகிறார்கள் இவ்வாறு தினம் தோறும் உடற்பயிற்சியும் நல்ல தூக்கத்தையும் கடைபிடித்து உங்கள் ஆயுளை நீங்கள் அதிகரிக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.