மீனவர்களுக்கு எச்சரிக்கை!! அதிகபட்ச வெப்பநிலை!! வெப்பத்தை தணிக்கும் கனமழை!! 

Warning to fishermen! Heavy rain!
சென்னை: தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்ப நிலையாக இயல்பை விட 2–3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் 26,27ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் குறையக்கூடும். இயல்பு நிலையில் இருந்து வெப்பத்தின் அளவு மாறுபடும். இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்ப நிலையாக 35-36 டிகிரி செல்சியஸ் காணப்படும் இடம் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். நாளை நகரின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 36-37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.
,
 தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்திய நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு இன்று மற்றும் நாளை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தென் தமிழக கடலோரப் பகுதிகள் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று ஆனது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்று எச்சரித்துள்ளது.
27 ஆம் தேதி கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வரையும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், ஜூன் 28, 29ம் தேதிகளில் எச்சரிக்கைகள் எதுவும் இல்லை என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகம் வரை உருவெடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பாக வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் வடமேற்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram