கரூர் சம்பவத்திற்கு விஜய்தான் காரணமா?? சிபிஐ விசாரணையில் செந்தில் பாலாஜி!!

கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி, பொதுக்கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசல் அதிகரிக்க காரணமாக இருந்ததாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறை அனுமதி பிற்பகல் நேரத்திற்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், விஜய் இரவு நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்ததால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அதிக அளவில் திரண்டதாகவும், இதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்த நிலையில் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும், சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தது முதல் மருத்துவமனைகளில் சிகிச்சை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்தது வரை அனைத்தையும் தானே ஒருங்கிணைத்ததாகவும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் தவெக தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் முன் வைக்கப்படுகின்றன என்றும், உண்மை நிலை முழுமையான விசாரணையில் வெளிவரும் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே பலரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மீது கவனம் திரும்பியுள்ளது.  யார் மீது தவறு என்பது கூடிய சீக்கிரம் விசாரணையில் தெரியவரும் என நம்பப்படுகிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram