உடல் வெப்பநிலை உயிரும் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது தசைகள் கல்லீரல் தோல் இவற்றில் அதிகப்படியாக உள்ள நீர்மத்தை கொண்டு ரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது இதன் காரணமாக விரிவடைந்த ரத்த நாளங்களில் மூலம் ரத்தம் அதிகமாக பாய்ந்து வெப்பம் அகற்றப்பட்டு உடல் குளிர்ச்சி அடைய வழி செய்கிறது. உடல் சுறுசுறுப்பாக இருக்கும் போது தோல் பரப்பில் உள்ள ரத்தநாளங்கள் விரிவடையும் இதனால் அதிக ரத்த ஓட்டம் உண்டாகிறது. உடலில் உறுப்புகளில் உள்ள வெப்பம் இவ்வாறு உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது.
*உணவு முறை:
வெப்பம் மிகுந்த நாட்களில் அளவுக்கு மீறி அதிகமாக உண்ணக்கூடாது உணவுகளை கொஞ்சமாக உண்ண வேண்டும் கொழுப்புகள் நிறைந்த உணவு மாவு சத்து நிறைந்த உணவுகளை உண்ணக்கூடாது மற்றும் புரோட்டீன்கள் நல்ல பயன் தரக்கூடியது புதிய பழங்கள் நாவிற்கு சுவையாக இருப்பதோடு உடலுக்கு தேவையான நார் பொருட்கள் மற்றும் நீர் சத்து இரண்டையும் அதிகமாக உடலுக்கு அளிக்கிறது கோடை உணவுகளில் மிக முக்கியமான உணவுகள் இவை மட்டுமே இவை மிகவும் உடலுக்கு ஏற்புடைய உணவுகளாக அமைகிறது.
*குளிர்பானங்கள்:
உடல் வெப்பத்தை குறைக்க மிக முக்கியமாக உதவுவது நாம் அருந்தும் நீர்மச்சத்துக்கள் உடலுக்கு மேலும் மேலும் நீர் தேவை என்று சுட்டிக் காட்டுவது தான் தாகம் ஆனால் நீர்மத்தின் அளவைவிட அதன் வெப்ப நிலை அளவு முக்கியமானது சூடான பானங்கள் அல்லது குளிர்பானங்களை உங்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் அருந்தலாம் உடற்பயிற்சி செய்த பிறகு அல்லது உடல் உழைப்பு ஈடுபட்ட பிறகு மிகவும் குளிர்ச்சியான பானங்களை அருந்துவது மிகவும் உடலுக்கு நல்லது இரைப்பையில் தசைபிடிப்பை உண்டாக்கும் என்பதை மறவாதீர்கள்.
*குளியல்:
வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது மிகவும் நல்லது குளியல் உடலை தூய்மை செய்கிறதோடு உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டுகிறது எவ்வித கெடுதலையும் உடலுக்கு செய்வதில்லை குளிக்கும் முன் இருந்ததை விட குளித்த பின்பு வெப்பநிலை சற்று அதிகமாக இருந்தாலும் வியர்த்து கொட்டியதால் தோளில் ஏற்பட்ட எரிச்சல்களில் இருந்து குளித்த பின்பு குளியல் மூலம் விடுபட முடிகிறது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக தான் இருக்கும் அதற்கேற்ப கோடையில் வெப்பத்தை அதிகம் உணராத படி இருக்கும் வழிகளை நம் பின்பற்ற வேண்டும் குளிர்ச்சியான பானங்களை பருக வேண்டும் பழங்களை சாப்பிட வேண்டும் இரண்டு முறை குளிர்ந்த நீர் நீரில் குளிக்க வேண்டும்.