கடவுளை கும்பிடும் பொழுது பலர் பல வேண்டுதல்களை வைக்கின்றனர். கடவுளிடம் நீ எனக்கு இதை கொடுத்தால் உனக்காக நான் இதை செய்கிறேன் என்பது போல கேட்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில் கடவுளின் அருள் நமக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கான சில முக்கிய குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடவுள் அருள் நமக்கு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வழிமுறைகள் :-
✓ கடவுளிடம் மனம் உருகி வேண்டும் பொழுது நம்மை அறியாமல் நம்முடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தால் நம்முடைய வேண்டுதல்கள் கடவுளால் ஏற்கப்பட்டது என அர்த்தம்.
✓ கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் பொழுது பல்லி சத்தமிட்டால் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. வேண்டக்கூடிய வேண்டுதல் நடப்பதற்கான அறிகுறி
✓ கோயிலின் உள்ளேயோ அல்லது கோயிலின் வெளியேயும் நின்று கடவுளை வணங்கும் பொழுது பச்சிளம் குழந்தை அழுதால் மிகவும் நல்ல சகுனம். உங்களுடைய கோரிக்கைகள் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அர்த்தம்
✓ உங்கள் வேண்டுதலின் பொழுது கோயில் மணி அடிக்கும் ஓசை கேட்டால் உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் கடவுளால் கேட்கப்பட்டது என அர்த்தம்
✓ வேண்டுதல்களின் பொழுது தீபாராதனை கடவுளுக்கு காட்டுவது வழக்கம். இதுபோன்ற தீபாராதனை காட்டும் பொழுது கண்களை மூடிக்கொள்ளாமல் கண்களை திறந்து கடவுளை பிரார்த்தனை செய்தல் வேண்டும்.
தீபாராதனை செய்யும் பொழுது கண்களை திறந்து கடவுளை பார்த்து தீபாராதனை முடிந்த பின்பு தான் கண்களை மூடி கடவுளை மனமார பிரார்த்தனை செய்ய வேண்டும். இனி நீங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது இது போன்ற சகுனங்களை கவனித்து பாருங்கள் கடவுளுடைய அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.