வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் போர் எதிரொலியாக மக்கள் மற்றும் வீரர்கள் ஆயிரக்கணக்கில் பலியானது குறிப்பிடத்தக்கது. இதில் லட்சக்கணக்கான பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதில் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. சமீபத்தில் நடவடிக்கை உக்கிரேனுக்கான ஆயுத உதவி மற்றும் உளவு தகவல்கள் பரிமாறும் சேவையையும் நிறுத்தியது அமெரிக்கா.
ரஷ்யா உக்ரைன் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியதில் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிடம் உக்கரைன் ஆதரவு கோரியது. ஆயுதம் விநியோக சேவையை அமெரிக்க நிறுத்தம் அறிவித்தது குறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் டிரம்ப்.
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், தற்காப்புக்கான ஆயுதங்களை முதற்கட்டத்தில் வழங்கப்பட உள்ளது என்றும் கூறினார் ட்ரம்ப். இதில் 155 மில்லி மீட்டர் அளவில் வெடிப்பு பொருட்கள் மற்றும் இலக்கை துல்லியமாக தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள் ஆகியவை இந்த ஆயுத விநியோகத்தில் அடங்கும்.
ஆயுதம் விநியோகம் எப்போது இருந்து தொடங்கியது பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசிக்காமல் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் ஆயுத விநியோகத்திற்கு உக்கரைனுக்கான தடையை விதித்தார்.
மேலும், இருப்பில் உள்ள ஆயுதங்கள் பற்றி ஆய்வு செய்வதற்கு பென்டகன் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். இதிலிருந்து தற்காலிக தடை முடிவுக்கு வந்தது என வெளியிட விரும்பவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவுக்கு எதிராக போரை உக்ரைன் மேலும் தீவிரப்படுத்தும் என உலக நாடுகள் கூறப்படுகிறது.