*மகளிர்க்கு ஒதுக்கப்பட்ட தமிழக பட்ஜெட்டின் நலதிட்டங்கள் கோவை மதுரையில் தல ஆயிரம் மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 275 கோடிக்கு மாணவர்கள் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன
*மேலும் திமுக ஆட்சியில் கொண்டு வந்த மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்காக ரூபாய் 3600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் 77 கோடி மதிப்பில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
*மேலும் 10,000 சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு 37 ஆயிரம் கோடி மகளிர்க்கு வழங்க இலக்கு .
*மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ 13 ஆயிரத்து 87 கோடி ஒதுக்கீடு மற்றும் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும்.
*மதுரை கோயம்புத்தூர் திருச்சி சேலம் திருப்பூர் ஈரோடு தூத்துக்குடி வேலூர் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகளில் உள்ள அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்பட உள்ளது அதற்காக ரூ 10கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
*மேலும் மாணவர்களுக்கான விரிவடையும் காலை உணவு திட்டத்திற்காக மேலும் 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் தற்போது 17.53 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றார்கள்.
*தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களை போலவே உயர் கல்வி செல்லும் மாற்று பாலின மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் வழங்கப்படும்.
*ஒன்றிய அரசால் வெகுவான பாதிப்படைந்தாலும் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரும் நிதியாண்டில் 14.6% அதாவது 2.4 லட்சம் கோடியாக வளர்ச்சி பெறும். நடப்பாண்டில் ஒன்றிய அரசு வரியின் பங்கு 52,191 கோடியாக இருக்கும் என கணிப்பு.
*மத்திய அரசு நிதி சரியாக வழங்காததால் மாநில அரசின் நிதி நிலைமை வெகுவாக பாதித்து வருகிறது .
*அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு நாட்களை சமன் செய்து பண பலன் பெறலாம். கொரோனா வாழ்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சலுகை மீண்டும் வழங்கப்படும்.
2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.