கிரிக்கெட்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி முதல் போட்டியாக வெஸ்ட் இண்டிஸ் அணியுடன் விளையாடி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 எழுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்ற நிலையில் தென்னாப்பிரிக்கா அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பின் முதல் போட்டியாக வெஸ்ட் இண்டிஸ் அணியுடன் விளையாடி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றது. முதலில் டாஸ் வென்று டேட்டிங் செய்ய தேர்வு செய்து களமிறங்கியது ஆஸ்திரேலியா. 56.5 ஓவரின் 180 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணி.
இதில் அதிகபட்சமாக டிராவீஸ் ஹெட் 59 ரன்னும், கவஜா 47 ரன்களும் எடுத்திருந்தன. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஜேடன் சிலெஸ் ஐந்து விக்கெட்டுகளும் சமர் ஜோசப் நான்கு விக்கெட்டுகளும் வீழ்த்தினார். தொடர்ந்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணி 20 ஓவர்கள் விளையாடி 57 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது களத்தில் பிராண்டட் கிங் மற்றும் ரோஸ்டன் சேர்ஸ் இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளும் கேப்டன் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.