Cricket: இந்திய அணி நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்ற பின் பல எதிர்மறையான சர்ச்சை கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியுடன் இறுதி போட்டியில் மோதி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி வரும் வேளையில் பல வகையான எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. அதுபோல வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் ஆன்ட்டி ராபர்ட் தற்போது எதிர்மறையான சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
இந்திய அணி இந்த வெற்றியை பெற்ற பின் பாகிஸ்தான் அணி ரசிகர்கள், இந்திய அணி தனக்கு சாதகமாக ஒரே மைதானத்தில் விளையாடி ஒரே மைதானத்தில் பயிற்சி செய்து வெற்றி பெறும் படி ஐசிசி உதவுகிறது, மேலும் ஐசிசி இந்திய அணிக்கு பல சலுகைகளை செய்து கொடுக்கிறது அதனால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது என பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களும் இந்த விமர்சனத்தை முன் வைத்தனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் ஆண்டு ராபர்ட் ஐசிசி என்றால் என்னை பொறுத்தவரையில் இந்தியன் கிரிக்கெட் போர்டு தான். ஐசிசிக்கு இந்தியா தான் எல்லா வகையிலும் கட்டளையிடுகிறது. கிரிக்கெட் என்பது தற்போது ஒரு நாடு போட்டியாக தான் தெரிகிறது. ஒருவேளை இந்தியா ஒய்டு மற்றும் நோபால் வேண்டாம் என்றால் அதை ஐசிசி இந்தியாவுக்காக நிச்சயம் நிறுத்தும் என சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதற்கு இந்திய அணி ரசிகர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி வெற்றி பெற்றதால் பல நாட்டு வீரர்களும் இதுபோன்ற கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருவது என்பது புதிதல்ல என கூறி வருகின்றனர்.





