3 குழந்தைகளுக்கு எமனாக மாறிய தந்தை!! பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கொடூரம்!! 

What a father he has become!!

நகரி: ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டம் எர்ரகொண்ட பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பெத்தபொயபள்ளியை சேர்ந்த புத்தா வெங்கடேஷ்வர் என்பவர் தனது குழந்தைகளை பெற்றோர்கள் பற்றி எரித்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு தீபிகா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு மோக்ஷிதா, ரகு வர்ஷினி என்ற 2 மகள்களும், சிவதர்மா என்ற ஒரு மகனும் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த புத்தா வெங்கடேஸ்வர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். தான் இறந்து விட்டால் குழந்தைகள் சிரமப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு குழந்தைகளை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மூன்று குழந்தைகளையும் மோட்டார் வாகனத்தில் வெளியே செல்வதாக அழைத்துச் சென்றுள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம் பேட்டை மண்டலம் ஹாஜிபூர் அழைத்து சென்றுள்ளார். அழைத்து சென்று மூன்று குழந்தைகளையும் இரக்கமின்றி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்ற குழந்தைகளும் கணவரும் வீடு திரும்ப வில்லை என்று பதற்றத்தில் பல இடங்களில் தேடியுள்ளார் அவரது மனைவி தீபிகா. எங்கு சென்று கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தீவிர விசாரணைக்கு பிறகு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஹாஜிபூர் சென்றது தெரியவந்தது. பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவின் மூலம் அவர்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டு குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. கணவன் – மனைவி தகராறில் தானும் தற்கொலை செய்து கொண்டு குழந்தைகளையும் கொலை செய்து விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram