சமீப காலமாகவே whatsapp இல்லாத மொபைல் செயலியை பார்ப்பதே அரிது. அதன் மெட்டா நிறுவனம் ஆனது வாட்ஸ் அப்பிற்கு பல பாதுகாப்பு அம்சங்கள் செய்திருந்தாலும், ஹேக்கர்ஸ் அதையும் தாண்டி செயல்படுகின்றனர். வாட்ஸ் அப்பில் ஏஐ மூலம் ஹேக் செய்தல் கண்டறிய கூடிய நுண்ணறிவு பொருத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பர்சனல் டேட்டா இதில் இடம்பெறுவதனால் மெட்டா நிறுவனமும் ஹேக்கர்ஸை தவிர்க்க பல முயற்சிகள் எடுத்து வைக்கின்றனர். அது குறித்த பதிப்பை இதில் காணலாம்.
உங்கள் whatsapp கணக்கு ஹேக் செய்ததற்கான சில அறிகுறிகள், நீங்கள் படிக்கும் முன்னரே உங்களுக்கு அனுப்பப்பட்ட மெசேஜ் டபுள் டிக், ப்ளூ கலரில் காட்டலாம். நீங்கள் அனுப்பாத மெசேஜ் உங்கள் சேட்டில் இடம்பெற்று இருக்கலாம். உங்களுக்கு தெரியாத எண்ணுக்கு உங்களது whatsapp கணக்கில் இருந்து அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இதனை நீங்கள் உறுதிப்படுத்த வாட்ஸ் அப்பில் உள்ள லிங்கிடு டிவைஸ் கனெக்ஷனில் போய் செக் செய்தால் தேவையற்ற கனெக்ஷன் இருப்பின், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் சுய விவரங்கள் ஏதேனும் மாற்றப்பட்டிருந்தால் ஹேக்கர்ஸ் உங்கள் அடையாளத்தை மாற்றி பிறரை ஏமாற்ற நிறைய வாய்ப்பு உண்டு. மொபைல் ஸ்லோ மூமன்ட்ஸ், ஹை ஹீட்டிங் கெப்பாசிட்டி ஆகியவையும் ஹேக்கிங்கிற்கு வழிவகுக்கும். மேற்கூறப்பட்டபடி, உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தால் வாட்ஸ் அப்பை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் ரீரிஜிஷ்டர் செய்வதன் மூலம் ஹேக்கர் ஆட்டோமேட்டிக்காக வெளியேற்றப்படுவார்கள். பெரும்பாலும் இது நடக்காமல் இருக்க தேவையற்ற லிங்க்சை கிளிக் செய்தல் கூடாது என்று எடுத்துரைக்கிறது. பாஸ்வேர்ட் ஆகிவற்றை யாரிடமும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளது மெட்டா நிறுவனம்.