* கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மிக மிக அவசியமாகும் இந்த பாதுகாப்பு குறிப்பில் முக்கிய பங்கு வகிப்பது உணவுமுறை மட்டும்தான் இதுவே குழந்தை மற்றும் தாய்க்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க கூடியது.
*கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு என சில உணவுகள் தவிர்க்கக் கூடியதாகவும் சில உணவுகள் எடுத்துக் கொள்ளக் கூடியதாகவும் அமைகின்றன.
* கர்ப்பிணி பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் *சாதாரண நிலையை விட இந்த நேரத்தில் அதிக அளவிலான ஊட்டச்சத்துள்ள உணவுகள் தேவைப்படுகிறது
*குடும்பம் மற்றும் சமூகம் மருத்துவம் இதன்படி கர்ப்ப காலத்தில் போதிய ஊட்டச்சத்து குழந்தை மற்றும் தாய் இருவரையும் பாதிப்பதாக இருக்கிறது.
*ஒரு கர்ப்பிணி பெண் தனக்கும் தனது கருவின் தேவைக்கு ஏற்றவாறு ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:
* முட்டைகள் பெரும்பாலும் எடுத்துக் கொள்ளலாம் முட்டையில் புரதங்கள் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன முட்டையில் உள்ள இந்த சத்துக்கள் கருவின் உயிரணுக்களை உருவாக்கி சரி செய்து குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது *அதிக புரதம் மற்றும் கால்சியம் மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பால் எடுத்துக் கொள்ளலாம் பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.எனவே கர்ப்ப காலத்தில் நெய் பன்னீர் தயிர் போன்ற வகைகள் எடுத்துக் கொள்ளலாம்
*பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு பருப்பு வகைகள் கொடுக்கலாம்
* வாழைப்பழங்கள் வாழைப்பழத்தில் பொட்டாசியம் கால்சியம் போன்ற சக்திகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்:
கர்ப்ப காலத்தில் சில உணவுப் பொருட்களை தடுப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
*அண்ணாச்சி பழம் பப்பாளி சோயா போன்றவற்றை தவிர்க்க வேண்டும் இதனால் கரு சுருக்கம் வழிவகுக்கும்.
*அதிக பாதரசம் கொண்ட மீன்களை தவிர்க்க வேண்டும்.
* பொறித்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
*புகைப்பிடித்த அல்லது சுட்ட அசைவ உணவுகள் மற்றும் பாதி வேக வைத்த அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான இயற்கையான உணவுகளை சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.