2026 ஆம் ஆண்டில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி எந்த கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க போகிறது என்பதை பற்றி அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியுள்ளார். நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பிரேமலதா விஜயகாந்த். அதில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. பதிலளித்த அவர் கூறியது,தற்போது நாங்கள் கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வருகிறோம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் ஈடுபட உள்ளோம்.
மேலும்,தமிழ்நாடு முழுவதும் ஒரு புறம் நானும்,விஜய பிரபாகரன் ஒரு புறம் என பயணம் மேற்கொள்ள இருக்கிறோம் என தெரிவித்திருந்தார். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பு ஜனவரி 9ம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடக்க இருக்கும் மாநில மாநாட்டில் தெரிவிக்கிறோம் என்று கூறினார். அதிமுகவுடன் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்தித்த போது ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக வாக்களித்து இருந்தது.அதை நிறைவேற்றவில்லை.
அதற்கு பதிலளித்த அதிமுக தரப்பினர் இதுபோன்ற எந்த வாக்குறுதியையும் அளிக்கப்பட இல்லை என்று கூறிவிட்டது. தற்போது அதிமுக கட்சி பாஜக உடன் கூட்டணி வைத்து விட்டது. தேமுக கட்சிகளுக்கு தற்பொழுது மூன்று வாய்ப்புகள் உள்ளன. பாஜக அதிமுக கூட்டணியில் இணைவது, திமுக கூட்டணி இணைவது, விஜய்யின் தவெக கூட்டணி இணைவது ஆகும். திமுக கூட்டணி இணைவது குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என கூறப்படுகிறது.
குறைவான தொகுதிகளை ஒதுக்கி தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள திமுக முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மகளிர் உரிமை தொகையை ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அவர்கள் கணவர்கள் மூலம் டாஸ்மார்க் வழியாக 5000 ரூபாய் வரை மாதந்தோறும் வசூலிப்பதாக நாமக்கல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியிருந்தார். எனவே திமுகவுடன் கூட்டணி வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது