தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து வெற்றி யாருக்கு??அரையிறுதி போட்டியின் டாஸ் நிலவரம் என்ன??

What is the toss result for the semi-final match?

Cricket : தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான அரையிறுதி போட்டி தற்போது நடைபெற உள்ளது அதன் டாஸ் நிலவரம் என்ன.

இந்த ஆண்டில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முதல் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றது இதில் இந்திய அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தற்போது இரண்டாவது அரையிறுதி போட்டியான தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டி 2.30 மணி அளவில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் அணி விவரம் மற்றும் டாஸ் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டி தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் தோல்வியடைந்தால் வெளியேறும் இந்த அரை இறுதி போட்டியானது லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியில் ராயல் ரிக்டன், தெம்பா பவுமா, டேவிட் மில்லர் வியான் முல்டர் மார்க்கோ ஜான்சன் கேசவ் மகாராஜ் ககிசோ ரபாடா லுங்கி நிகிடி என 11 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் வில் யங்  ரச்சன் ரவீந்தரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளன் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, கயல் ஜெமிசன், வில்லியம் ஓ ரூர்க் என்ன நியூசிலாந்து அணியில் 11 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram