Cinema: தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் இந்த குழப்பம் நிலவு வருகிறது ஒரு திரைப்படத்தின் உண்மையான வெற்றி எதை குறித்து அமையும் என்று சமூக வலைத்தளங்களில் தற்போது கருத்துக்கள் உலா வருகின்றன.
ஒரு திரைப்படம் வெளியாகி அந்த திரைப்படத்தின் வெற்றி என்பது அந்த திரைப்படத்தின் உடைய வசூல் தொகை பொறுத்து அமையுமா? அல்லது அந்த திரைப்படம் ஓடிய நாட்களை பொறுத்து அமையும் என தற்போது சமூக வலைதளங்களில் கருத்துக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த கருத்து வேறுபாடு தொடங்கிய இடம் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் தான் டிராகன்.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்து 100 கோடியை வசூல் செய்தது. இதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு திரைப்படக் குழுவினர் கொண்டாடினர். அதுமட்டுமல்லாமல் இணையதளத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களில் 100 கோடிகளை வசூல் செய்த முதல் இளம் ஹீரோ என்று பிரதீப் ரங்கநாதனை கூறி வந்தனர்.
இதன் பின் தொடங்கியதுதான் இந்த விவாதம் அது குறித்து இணையதளங்களில் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் அவர்கள் கூறுகையில் இப்போதுதான் இந்த 100 கோடி 200 கோடி வசூல் எல்லாம் அதற்கு முன் ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்றால் அந்த திரைப்படம் 100 நாட்களை கடக்க வேண்டும். நிறைய திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து ஒரு ஆண்டு இரு ஆண்டு என வருட கணக்கில் ஒடிய திரைப்படங்களும் உண்டு அதனால் உண்மையான வெற்றி என்பது எத்தனை நாட்கள் அந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடுகிறது என்பதை பொறுத்து தான் என்று கருத்துக்கள் பகிரப்பட்டன.
மறுபக்கம் ஒரு இளம் வீரராக பிரதீப் ரங்கநாதன் வெற்றி பெற்றுக் கொண்டு வருவது யாருக்கும் பொறுக்கவில்லை அதனால் தான் மற்ற ஹீரோக்களின் திரைப்படங்கள் நன்றாக ஓடவில்லை என்று இந்த திரைப்படத்திற்கு எதிர்மறையான கருத்துக்கள் கூறி வருகின்றனர் என மறுபக்கம் கருத்துக்கள் பகிர்ந்தும் வருகின்றனர். உங்களைப் பொறுத்தவரை ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது வெகு நாட்கள் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதா?? அல்லது பல கோடிகளை வசூல் செய்வதா??