இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்தும் வெற்றி பெற முடியவில்லை இங்கிலாந்தின் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அவ்வாறு வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தான்.
என்னதான் பும்ரா சிறப்பாக பந்து வீசினாலும் அவர் ஒருவரை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை அது மட்டும் அல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் மும்ரா கூட எந்த விக்கெட்டும் வீழ்த்தாமல் மோசமான பந்துவீச்சினை வெளிப்படுத்தி வந்தனர் இந்திய அணி பந்துவீச்சாளர்கள். இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு லைனப்பை மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து ஏ பி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
உம்ராவுக்கு ஏற்கனவே உடல் தகுதியில் பிரச்சனை நீடித்து வருகிறது அவருக்கு பணிச்சுமை அதிகமாக நிர்ணயிக்கும் பட்சத்தில் அவர் மீண்டும் காயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் விளையாட முடியாத நிலை ஏற்படும். அதனால் ஆரம்பத்திலேயே 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டியில் மட்டும் அவர் பங்கேற்று விளையாடுவார் என கூறப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்.
இது குறித்து அவர் கூறுகையில் தற்போது உலக கிரிக்கெட்டில் அனைத்து விதமான ஃபார்மட்டுகளிலும் உம்ரா தான் தலைசிறந்த பவுலராக விளங்கி வருகிறார். அப்படி இருக்கும் நிலையில் மூன்று போட்டியில் மட்டும் அவர் விளையாடி ஓய்வு கொடுப்பது என்பது தேவையில்லாத ஒன்று. கிரிக்கெட்டைப் பொருத்தவரை மிகவும் உயர்ந்தது டெஸ்ட் கிரிக்கெட் தான் அதனால் மற்ற டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்கள் முக்கியத்துவத்தை குறித்து டெஸ்ட் போட்டியில் அனைத்து போட்டிகளிலும் முன் நின்று அவர் விளையாட வேண்டும் இதற்கு இந்திய அணி தான் அதற்கு ஒரு திட்டத்தை தீட்ட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.