கோவை: கோவையில் பெண் ஒருவர் டாக்ஸியில் 10 சவரன் நகை மற்றும் பணத்தை விட்டு சென்றுள்ளார். பின் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கவனக்குறைவு மற்றும் மறதி ஆனால் மிகப்பெரிய பிரச்சினைகள் உருவெடுக்கும் நிலையில் பல்வேறு பொருட்களை இழப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் இந்த சம்பவம் கோவையில் பேசும் பொருளாக மாறி இருப்பது பெருமைக்குரியது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகனின் மனைவி மதுமிதா நேற்று கோவை வந்திருக்கிறார்.
கால் டாக்ஸி புக் செய்ததில் சம்பத் குமார் என்று ஓட்டுநர் வந்திருக்கிறார். அவரது பணி காரணமாக திடீரென டாக்ஸியை ரத்து செய்து அவசரமாக கிளம்பியதில் தனது பொருட்களை டாக்ஸியில் விட்டு சென்றுள்ளார். அந்த டாக்ஸியில் 10 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ 10,000 ஆகியவற்றை பரபரப்பில் தவறவிட்டார். தாமதமாக உணர்ந்த அவர் ஓட்டுநரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது திருச்சி நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
நகை மற்றும் பணத்தை தவறவிட்ட அந்தப் பெண்ணிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விசாரணை நடந்து கொண்டிருந்த வேளையில் டாக்ஸி டிரைவர் சம்பத்குமார் தானாக முன்வந்து மதுமிதா தவறவிட்ட 10 பவுன் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரொக்க பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இவர் செயலைக் கண்டு மதுமிதா மற்றும் காவல்துறையினர் ஆச்சரியமடைந்து ஓட்டுநர் சம்பத்குமாரை பாராட்டினர். இந்த செய்தி கேட்டு மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஓட்டுநர் சம்பத்குமாரை அழைத்து சால்வை அணிவித்து பாராட்டியுள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.