CRICKET: ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து மனம் திறந்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதின இதில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியாக ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன இரவு நடைபெறும் இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் மும்பை இரு அணிகளும் மோதிக் கொள்ள உள்ளன.
இதுவரை அதிக கோப்பைகள் வென்ற இரு அணிகள் என்றால் சென்னை மற்றும் மும்பை இரு அணிகளும் தல 5 கோப்பைகள் வென்றுள்ளன. இந்த வருடம் சென்னை அணி தான் கோப்பை வெல்லும் மற்றும் மும்பை அணி தான் கோப்பை வெல்லும் என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டி என்றாலே ஊரணி ரசிகர்கள் மட்டுமல்லாமல் மொத்த அணி ரசிகர்களும் ஒரு வீரரின் விளையாட்டு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றால் அது தோனி தான். அவர் எப்போது ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற கருத்து தற்போது அதிகம் பேசப்பட்டு வரையும் நிலையில், இது குறித்து அவரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் வீல் சேரில் இருந்தால் கூட என்னை ரசிகர்கள் விளையாட வைத்துவிடுவார்கள், என்னால் முடிந்த வரை நான் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.