கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடர்பு வென்ற பின் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அடியும் நியூசிலாந்து அணியும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து 252 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இதனால் 12 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர்ந்து கோப்பையை இந்திய அணி மீண்டும் கைப்பற்றி உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கருத்தொன்றை தெரிவித்துள்ளார். இந்திய அணி இந்த சாம்பியன் டிராஃபி தொடரில் துபாயில் மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடி ஒரே மைதானத்தில் பயிற்சி செய்து அதிலே போட்டியிலும் விளையாடுகிறது என பல வகையான விமர்சனங்கள் இந்தியாவின் மீது எழுந்து வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் வீரரே கருத்து கூறியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் இந்திய அணி துபாயில் மட்டுமல்ல வேறு எங்கு விளையாடி இருந்தாலும் அல்லது பாகிஸ்தானில் விளையாடி இருந்தாலும் இதே வெற்றியைத் தான் இந்திய அணி பெற்றிருக்கும். 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி இதுபோல எந்த போட்டியிலும் தோல்வி அடையாமல் இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றது. அது போல தான் இந்தத் தொடரிலும் எந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடையாமல் கோப்பையை வென்றுள்ளது.
அது மட்டுமல்லாமல் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது அதை இந்திய ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் அதை கருத்தில் கொண்டு நிதானமாக விளையாடி கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி என அவர் கூறியுள்ளார்





