பொதுவாக நெகட்டிவிட்டி அதிகமாக இருந்தால், அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போனால் பொதுவாக அனைத்து மதத்தினரும் கோயிலுக்கு சென்று வழிபட்டு ஏதேனும் கயிறு வாங்கி கட்டிக் கொள்வார்கள். கிறிஸ்தவர்கள் என்றால் வீட்டிற்கு சிஸ்டரை வரவைத்து ஜபம் செய்து கொள்வார்கள். முஸ்லிம்கள் என்றால் மந்திரித்து, தொழுகை நீர் தெளித்து, கயிறு கட்டிக் கொள்வார்கள். இந்துக்கள் என்றால் கோவிலுக்கு சென்று வழிபட்டு சுற்றி போட்டு, கருப்பு அல்லது சிவப்பு நிற கயிறு வாங்கி தேவைப்பட்டவர்களுக்கு கட்டிக் கொள்வார்கள். சனி பகவானை பொருத்தும் இந்த கயிறு ஒவ்வொருவருக்கும் இடையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
பிறந்த நேரத்தை பொறுத்துள்ள ராசியை அடிப்படையாக வைத்து இது மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட பேருக்கு சிவப்பு கயிறு எதிர்மறை ஆற்றலை குறைத்து, நேர்மறை எண்ணங்களாக வலுபட பெரிதும் உதவும். சிலருக்கு இந்த கயிறு பெரிதளவு காலை வாரிவிட்டு விடும். அந்த வகையில் ஜோதிடப்படி, கும்பம், மீனம் ஆகிய ராசியினர் கட்டாயமான முறையில் சிவப்பு கயிறை அணியக்கூடாது.
இது அவர்களின் வாழ்க்கையில் மேற்கொண்டு பாதகத்தை ஏற்படுத்தும். இந்த ராசியினர் மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது கருப்பு நிற கயிறு அணியலாம். இவர்களுக்கு இந்த சிவப்பு கயிறு கூடுதல் எதிர்மறை எண்ணங்களை அழிக்கும். சிவப்பு நிற கயிறை மேஷம், ரிஷபம் விருச்சிகம் ஆகிய ராசியினர் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அணியலாம். இது மேற்கொண்டு அவர்களுக்கு நன்மை பயக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்க்கைக்கு அடுத்த நிலைக்கு அது எடுத்துச் செல்லும்.