ஊருக்கே பிடித்த சில்க் ஸ்மிதாக்கு யாரை பிடிக்கும் என்று தெரியுமா!! வாங்க தெரிந்து கொள்ளலாம்!!

Who does Silk Smith like?

80 களில் தமிழ்நாட்டின் கனவு கன்னியாக விளங்கியவர் நடிகை சில்க் ஸ்மிதா. கவர்ச்சி என்றாலே உடனடியாக இவருடைய ஞாபகம் மட்டுமே அனைவருக்கும் வரவகையில் தன் கவர்ச்சி என்றாலே உடனடியாக இவருடைய ஞாபகம் மட்டுமே அனைவருக்கும் வரவகையில் தன் பார்வையாலேயே அனைவரையும் தன்வசம் இழுக்கக் கூடியவர்.

போதை ஏற்றும் கண்களை உடைய அழகி என்று கூட பலரும் இவரை புகழ்ந்ததுண்டு. இப்படிப்பட்ட சில்க் ஸ்மிதா அவர்கள் பொதுவாக அனைவருக்கும் எடுத்தவுடன் கால் சீட் கொடுத்து விடுவது இல்லையா மாறாக அவருடைய கால்ஷீட் வேண்டி வரக்கூடிய தயாரிப்பாளர்கள் காத்திருந்து பெற்று செல்லக்கூடிய நிலைதான் இருந்திருக்கிறது.

இப்படிப்பட்ட இவர் யாரிடம் நெருங்கி பழகுவார் யாரைக் கண்டால் எவ்வாறு இருப்பார் என்பதை குறித்து விளக்குகிறார் டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகை ஆகிய சுஜாதா :-

பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என யாராவது தன்னிடம் வருகிறார்கள் பேசுகிறார்கள் என்றால் கால் மேல் கால் போட்டு திமிராக நடந்து கொள்வாராம் சில்க்ஸ்மிதா. ஆனால் அதற்கு அப்படியே மாறாக அந்த படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிகிற லைட் மேன், காபி கொடுக்கிறவங்க போன்ற சின்ன சின்ன வேலை செய்யக்கூடியவர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வாராம். இதற்கு காரணம் அவர் பட்ட கஷ்டங்கள் என விளக்குகிறார் நடிகை சுஜாதா.

படப்பிடிப்பு தளத்தில் சின்ன சின்ன வேலைகளில் பணிபுரியக்கூடியவர்களை பார்த்தால் அவர்களுக்கு டீ, காபி ஜூஸ் போன்றவற்றை கொடுக்கும்படி அன்போடு பேசக்கூடியவர் என்றும் அதே சமயம் தான் இருக்கக்கூடிய படப்பிடிப்பு தளத்திற்கு டைரக்டர் ப்ரொடியூசர் மற்றும் அந்த படத்தின் ஹீரோ என யாராவது வரும் பட்சத்தில் அவர்கள் முன் திமிராக நடந்து கொள்ளக் கூடியவராகவும் அவர் திகழ்ந்ததாக தெரிவித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா இறந்தது இன்று வரை மர்மமாக இருப்பதாகவும் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதை குறித்தும் கண்கலங்கி இருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகையான சுஜாதா.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram