Cricket : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது தசை பிடிப்பு காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என கூறியதில் அடுத்த தொடக்க வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில் தசை பிடிப்பு காரணமாக அவ்வப்போது வெளியேறி விளையாடி வந்தார். இந்த போட்டி முடிந்த பின்பு தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சியின்போது ரோகித் சர்மா இந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது ரோகித் சர்மா தசை பிடிப்பு காரணமாக அடுத்து நடக்க இருக்கும் நியூசிலாந்து போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. நியூசிலாந்து போட்டியில் கேப்டனாக ரோகித் சர்மாவிற்கு பதிலாக துணை கேப்டன் சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. ரோகித் சர்மா ஒருவேளை நியூசிலாந்து தொழில் விளையாடினால் அடுத்தடுத்து நடக்கவிருக்கும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க முடியாத அளவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரோகித் சர்மா அணியில் பங்கேற்காவிட்டால் சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்பார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக தொடக்க வீரராக தற்போது ஆறாவதாக களமிறங்கி விளையாடுவதும் கே எல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. மேலும் அணியில் புதிய வீரராக ரிஷப் பண்ட் விளையாட உள்ளதாகவும் அவர் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.





