கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் லக்னோ இரு அணிகளுக்கிடையே என போட்டியில் அசுதோஷ் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான நான்காவது போட்டி நேற்று டெல்லி மற்றும் லக்னோ இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்றது. டாஸ் என்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 29 ரன்கள் அடித்து 210 ரன்கள் அடித்தால் வெற்றி என இலக்கை நிர்ணயித்தது.
இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்கள், மிட்செல் மார்ஷ் 72 ரன்கள் எடுத்திருந்தனர். தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரர்கள் ஏமாற்றத்தையே கொடுத்தனர். முக்கிய வீரர்கள் குறைவான எண்களில் ஆட்டம் இழக்க டெல்லி அணியின் தொடக்க வீரர் டூப்ளசிஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்படி அணி ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் களமிறங்கினர் விப்ராஜ் மற்றும் அசுதோஷ் சர்மா.
விப்ராஜ் 15 பந்துகளில் 39 ரன்களை அதிரடியாக விளாசினார். அதன்பின் ஆட்டமிழந்து வெளியேறினார். பேட்ஸ்மேன் அனைவரும் வெளியேறு நிலையில் அசுத்தோஷர்மா மற்றும் தனியாக அணியை வெற்றி பெற போராடினார். 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஒரு ஓவரில் ஆறு ரன்கள் தேவை ஒரு விக்கெட் மட்டுமே மீதம் உள்ளது. இந்நிலையில் கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் 6 அடித்து ஆட்டத்தை முடித்தார். கடைசி ஓவர் வரை ஒரு செல் மேட்ச்சாக நடைபெற்று முடிந்த போட்டிகளிலேயே சிறந்த போட்டியாக இந்த போட்டி பார்க்கப்படுகிறது. அசுதோஷ் சர்மா 31 பந்துகளை எதிர் கொண்டு 66 ரன்கள் விளாசி இருந்தார். இதில் 5 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கும். இவர் கடைசி 7 பந்துகளில் மட்டும் 34 விளாசியுள்ளார்.

