கடந்த பத்து ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிகளுக்கு எந்த ஒரு ஆசிரியரும் நியமனம் செய்யவில்லை என்று ஒரு சர்வே கூறுகின்றது. ஒருபுறம் அரசு வேலை வாங்கித் தருவதாக பல பண மோசடிகள் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.
எனினும் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு நடப்பு அரசு ஆசிரியரை நியமிக்காதது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருபுறம் அரசு வேலை தேடி மக்கள், மற்றொருபுறம் காலியாக கிடக்கும் அரசு பணியிடங்கள். திறமை இருந்தும், தேர்வு எழுதியும் வேலை கிடைக்காத நடுத்தர வர்க்கங்கள்.
ஒரு சர்வே கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது என்று விளக்குகின்றது. அரசு வேலை தேடும் ஆசிரியர்களை அரசு பணியில் இணைக்க இன்றைய ஆட்சி கவனம் செலுத்தாது பெரும் ஆச்சரியத்தை எழுப்புகின்றது.
நல்ல திறமை வாய்ந்த ஆசிரியர்களை அரசு பணியில் இணைத்து அரசு பள்ளிகளை திறம்பட செயல்படுத்தினால் தனியார் பள்ளிகளின் மார்க்கெட்டிங் குறைய வாய்ப்புள்ளது. இதனை நடப்பு அரசு பத்து ஆண்டுகளாக யோசிக்க தவறியது பலரையும் சந்தேகத்துக்கு உள்ளாக்கியுள்ளது. மற்றொரு புறம் அரசு வேலை வாங்கித் தருவதாக கும்பல்கள் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.