தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேல்பட்டமுடையார்புரம் பகுதியில் உள்ள வேதகோவில் தெருவில் வசித்து வரும் தம்பதியினர் வேல்துரை மற்றும் பேச்சியம்மாள். இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் வேல்துரை என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் அடைக்கலக்கப்பட்டதில் இருந்து கொண்டு வாடகை வீட்டில் வசித்து வேளைக்கு சென்று வந்துள்ளார்.
அவர் வாடகை வீட்டில் இருந்து இரு சக்கரவாகனத்தில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் அவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொது அவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின் கார் ஓட்டி பந்தவர்களை பிடித்து விசாரித்த காவல்துறை பல திடுக்கிடும் தகவல்களை வெளிகொண்டுவந்தது.
வாடகை வீட்டின் உரிமையாளர் முத்து சேர்மன் எனப்படும் சுதாகருக்கும், பேச்சியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதனாலானது. இந்நிலையில் வேல்துரை வேலைக்கு செல்லும் நேரத்தில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் இதை தெரிந்து வேல்துரை இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் இணைத்து கணவர் வேல்துரையை முடித்துக்கட்ட திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்துள்ளனர். மேலும் இதில் சுதாகர் நண்பனான ஆறுமுகம் என்ற டிரைவர் உடந்தை இவர்கள் அனைவரும் இணைந்து வேல்துரையை தீர்த்து காட்டியுள்ளனர். இதனை விசாரித்த காவல்துறை 3 வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.