பாஜக வின் தமிழக தலைவராக இருந்த அண்ணாமலை அவர்கள் தற்பொழுது பதவியில் இருந்து நீக்கப்பட இருக்கிறார். தமிழகத்தில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் பதவிக்காக ஏற்பட்ட விரிசல் தற்பொழுது பெரிய அளவில் முற்றி அண்ணாமலையை கட்சியை விட்டே நீக்கும் அளவிற்கு சென்றுள்ளது.
சூழல் இவ்வாறு இருக்க, தன்னுடைய பதவியை தக்க வைத்துக் கொள்ள அண்ணாமலை பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் மிகவும் முக்கியமான ஒன்றாக ஆர்எஸ்எஸ் தரப்பிடமும் கர்நாடகா மடத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், இதில் கர்நாடகா மடம் அண்ணாமலைக்காக மேலிடத்தில் பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் தொண்டர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் சென்று மேல் இடத்தில் அண்ணாமலைக்காக பரிந்துரை செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு அவரும் பேசுகிறேன் என உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அண்ணாமலையின் பதவியானது பறிபோகப்போவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய இடத்திற்கு மாற்றாக பொன் ராதாகிருஷ்ணன் அல்லது நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தன் பதவியை தக்க வைக்க முடியாத பட்சத்தில் அண்ணாமலை கட்டாயமாக புதிய கட்சியை நிறுவுவார் அல்லது விஜயுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அதற்கு புதிய அரசால் மட்டுமே வழிவகை செய்ய முடியும் என்றும் ஏற்கனவே ரஜினி அவர்கள் சொல்லி இருப்பதை குறிப்பிட்டு இவர்கள் இருவரும் இணையும் பட்சத்தில் புதிய அரசு உருவாக ரஜினியும் கைகோர்ப்பார் என பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. எனினும் அரசியல் குறித்த வியூகங்களை இப்பொழுது அரசியல் விமர்சகர்களாலேயே புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.