மார்ச் மாதத்தில் வங்கிகள் பாதி நாள் தான் செயல்படுமா!! எத்தனை நாட்கள் தெரியுமா!!

Will banks operate only half day in March

மார்ச் மாதத்தில் ஹோலி, ரமலான் போன்ற அடுத்த அடுத்த பண்டிகைகள் வர இருப்பதால் வங்கி ஊழியர்களுக்கு இந்த மாதம் குறைந்த நாட்களே செயல்படும் என்று ஆர்ஆர்பி தகவல் வெளியிட்டுள்ளது. வங்கிகளை அடிக்கடி பயன்படுத்துவோர் இந்த நாட்களுக்கு ஏற்ப அவர்களின் பிளானை மாற்றிக் கொள்ளவும். அந்தந்த மாநிலங்களில் நடக்கும் பண்டிகைகளை பொறுத்து அடுத்த மாதத்திற்கான விடுமுறை நாட்களை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.

அந்த வகையில் பண்டிகை கால விடுமுறை, சனி, ஞாயிறு போன்ற விடுமுறைகள் ஆகியவை அனைத்தும் சேர்க்கப்பட்டு விடுமுறை வெளியிடப்பட்டுள்ளது. அந்த விடுமுறை பட்டியலில் குறிப்பிட்ட தேதிகள் பின்வருமாறு, மார்ச் 2 ஞாயிறு விடுமுறை, மார்ச் 7 சாஃப்சார் குட் மிஸோரம் மாநில உள்ளூர் விடுமுறை, மார்ச் 8,9 – இரண்டாவது வார சனி ஞாயிறு விடுமுறை, மார்ச் 13- ஆட்டுக்கல் பொங்கல், ஹோலிகா தஹான் பண்டிகைகள்.

இதனால் உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், கேரளா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிவற்றிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 14 வெள்ளி- ஹோலி, (திரிபுரா, தமிழகம், ஒடிசா, கர்நாடகா, மணிப்பூர் மற்றும் கேரளா) தவிர பிற மாநிலங்கள் விடுமுறை. மார்ச் 15 அகர்தலா ( இம்பால், பாட்னா போன்ற நகரங்களுக்கு விடுமுறை). மார்ச் 16 ஞாயிறு விடுமுறை. 22,23 – நான்காவது வார சனி,ஞாயிறு விடுமுறை. 27, 28- ஜம்மு காஷ்மீருக்கு உள்ளூர் விடுமுறை. மார்ச் 30 ஞாயிறு விடுமுறை. 31 புனித ரமலான் ஆக மொத்தத்தில் வங்கி  விடுமுறை நாட்கள் போக 14 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்று ஆர்.ஆர்.பி தகவல் வெளியிட்டுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram