இலவச மின் கட்டணம் பெரும் மின் இணைப்புகளுக்கு எந்தவித மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. மேலும் அனைத்து வகையான இலவச மின்சார சலுகைகள் தொடரும் என மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்ட அறிக்கையில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இலவச இணைப்பின் மூலம் நகரங்கள்,எளிதில் செல்ல முடியாத மலை கிராமங்களை தவிர்த்து மற்ற கிராமங்கள் என பயன்பெறுகின்றனர்.
“இலவச மின் இணைப்பு” என்பது அரசு அல்லது மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் வழங்கும் ஒரு திட்டமாகும். இதில் இலவசமாக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இது குறிப்பாக ஏழை குடும்பங்கள்,கிராமப்புற பகுதிகள்,பள்ளிகள்,மருத்துவமனை கள் போன்ற பொதுச் சேவை இடங்கள்,விவசாய உபயோகங்களுக்கு ஆகியவைகளுக்கு வழங்கப்படும் திட்டமாகும். தமிழ்நாட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சில திட்டங்கள் மூலம் இலவச மின் இணைப்புகளை வழங்குகிறது.
உதாரணத்திற்கு:
• இலவச வீட்டு மின் இணைப்பு – பட்டா நிலம் உள்ள ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
• விவசாய மின் இணைப்பு – விவசாயிகளுக்கு இலவசமாக அல்லது சலுகைத் தரத்தில் வழங்கப்படுகிறது.
• பசுமை வீடுகள் திட்டம் – சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் கட்டப்படும் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.
• இலவச வீட்டு மின் இணைப்பு – பட்டா நிலம் உள்ள ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
• விவசாய மின் இணைப்பு – விவசாயிகளுக்கு இலவசமாக அல்லது சலுகைத் தரத்தில் வழங்கப்படுகிறது.
• பசுமை வீடுகள் திட்டம் – சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் கட்டப்படும் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.
இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது TANGEDCO இணையதளத்தில் (https://www.tangedco.org) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.தேவைப்படும் ஆவணங்கள் அடையாள சான்றுகள் (ஆதார், வாக்காளர் அட்டை) முகவரி சான்று,நில உரிமை ஆவணம் / பட்டா மற்றும் வருமானச் சான்று (ஏழை பிரிவுக்கு) இது உங்கள் மாவட்டம் அல்லது மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும். தற்போது தமிழகத்தில் 3 கோடிக்கு அதிகமாகமானோர் மின் இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஒரு விளக்கு மட்டும் பயன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.மேலும் 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் ஏற்பட்ட மின்சாரப் பற்றாக்குறையால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும்.இதனை சமாளி க்க தனியார் துறையிடமிருந்து மின்சாரம் பெற்று பொது விநியோகம் செய்து வந்தது. அதன் பிறகு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க செய்தது. தமிழகத்தில் 2022 ல் செப்டம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த திமுக மின் கட்டணத்தை உயர்த்தியது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்த மின் கட்டணம் செலுத்துவதாக விளக்கம் அளித்திருந்தது.
2016 ஆம் ஆண்டு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்திருந்தது. மேலும் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணம் வசூலிக்கப்படும். தமிழகத்தில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற எல்லா வகையான மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணமானது 3.16 சதவீதம் அதிகரிக்கப்படும் என மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையிலும் அரசு சேவை மனப்பான்மையுடன் இயக்கி வருவதாக மின் வாரியம் சார்பில் தெரிந்துள்ளது.