கிரிக்கெட்: இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் வர தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்நிலையில் இரண்டு புதிய வீரர்கள் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது இதில் முதல் போட்டி மட்டும் முடிவடைந்துள்ளது. இந்த முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணி அபார வெற்றி பதிவு செய்து ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்திய அணி முதல் போட்டியில் பேட்டிங் சிறப்பாக செய்தாலும் பௌலிங் மோசமாகவே செய்தது எனவே கூறலாம் இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்கள் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது உள்ளே வரும் புதிய வீரர்கள் யார் என்று தகவல் கசிந்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் லிங்கில் பொம்மரா 5 விக்கெட் வீழ்த்தினாலும் இரண்டாவது இன்னிசில் விக்கெட் எடுக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் பனிச் சுமை அதிகம் என்ற காரணத்தினால் இரண்டாவது போட்டியில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிரசித் கிருஷ்ணா அதிகமான ரண்களை விட்டுக் கொடுத்து விக்கெட்டும் வீழ்த்த முடியாமல் திணறி வரும் நிலையில் இந்த இரு வீரர்களுக்கு பதிலாக ஆகாஷ் டீப் மற்றும் அசுதீப் சிங் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.