வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். அதன்படி ஈரான் அடி பணியாவிட்டால் ஈரானின் நிலைமை மிக மோசமாக இருக்கும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் நாட்டில் மூன்று அனைத்து நிலையங்களை அமெரிக்க போர் விமானங்கள் தாக்கியதாக அதிபர் கூறியுள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்தியது குறித்து பேசிய டிரம்ப் ஈரானுக்கு இரண்டு வழிகள் உண்டு என்றும், ஒன்று அமைதி மற்றொன்று பெருந்துயரம் என்று கூறியுள்ளார்.
ஈரானின் முக்கியமான ஆயுத நிலையங்களை தாக்கி உள்ளதாகவும், மேலும் பல இடங்களுக்கு குறி வைத்துள்ளதாகவும், அமெரிக்க ராணுவத்தால் இந்த தாக்குதல் நடத்தியதை மற்ற ராணுவத்தினரால் செய்ய முடியாது என்று ராணுவத்தினருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார் ட்ரம்ப். ஈரானில் நடந்த தாக்குதலில் அதிகாரிகள் பொதுமக்கள் என பல பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அணு உலைகள் மீது அமெரிக்கா குண்டு மழை பொழிந்து தாக்கியுள்ளது பெரும் சேதத்தை விளைவித்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் மீதான போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் அமெரிக்காவின் இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெறும். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை முடிவு கட்ட நடத்தி வரும் தாக்குதல் இது.
ஈரான் அமைதியான நிலைக்கு திரும்பாவிட்டால் தாக்குதல் இன்னும் மோசமான நிலையை சந்திக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்குமா அல்லது பணியுமா என்பது கூடிய விரைவில் தெரியவரும். அமெரிக்க ராணுவத்தினர் இலக்குகளை துல்லியமாக கொண்டு அணு ஆயுத மையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.





