முதல் போட்டிக்கே முட்டுகட்டு.. நடைபெறுமா கொல்கத்தா vs பெங்களூர்??

The first match is deadlocked.. Will Kolkata vs Bangalore take place??

கிரிக்கெட்: ஐ பி எல் இன் இந்த வருடத்தின் முதல் போட்டியான கொல்கத்தா மற்றும் பெங்களூர் இடையிலான போட்டி நடைபெறுமா என கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி தமிழ் நாளை கோலாகலமாக கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு லீக் தொடர் எதுவென்றால் அது ஐபிஎல் தொடர் தான். அப்படிப்பட்ட தொடரில் முதல் போட்டிக்கே முட்டுக்கட்டு போட்டுள்ளது வானிலை.

முதல் போட்டியான கொல்கத்தா மற்றும் பெங்களூர் இடையிலான போட்டியானது நாளை கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அது மட்டுமல்லாமல் தொடக்க நிகழ்ச்சிகளும் ஏராளமானவை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் வானிலை இந்த போட்டிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. நாளை போட்டியின் நடைபெறும் நேரத்தில் கொல்கத்தாவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இதனால் ரசிகர்கள் மனதில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்தாண்டு தொடங்கியுள்ள முதல் போட்டியே கேள்விக்குறியாக உள்ளது. இதுவரை இரு அணிகளும் விளையாடிய போட்டிகளில் நேருக்கு நேர் 34 போட்டிகளில் 20 போட்டிகளில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. 14 போட்டிகளில் பெங்களூர அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி யாருக்கு??

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram