வாஷிங்டன்: ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே இருந்த போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கு இடையே இருந்த தாக்குதலால் போர் பதற்றம் அதிகரித்த நிலையில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் அமெரிக்கா களத்தில் இறங்கியது.
அதன்படி ஈரானின் முக்கிய அணுசக்தி உலைகளான பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் போன்ற அணுசக்தி உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது என அமெரிக்க தரப்பில் கூறப்பட்டது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு ஆதரவாக சில நாடுகளும் எதிர்ப்பாக ஒரு சில நாடுகளும் இருந்த நிலையில் உலக நாடுகளில் சில நாடுகள் நடுநிலையாக இருந்து விட்டது. அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சிட்டியில் போராட்டம் வெடித்தது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் பதற்றம் தணிந்து பகைமைகள் மறைவதற்கான முக்கிய நிகழ்வுகள் ஏற்படும் என வெளியிட்டுள்ளார். போர் நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேல் 12 ஆவது மணி நேரத்தில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளும் எனவும் 24 மணி நேரத்தில் போர் முழுமையாக நிறுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.