தமிழக வீரர்கள் களமிறக்கப்படுவார்களா??  வெளியேறப் போகும் இரண்டு வீரர்கள் யார்??

Will the Tamil Nadu players be fielded?

Cricket : இந்திய அணியில்  இடம் பெற்றுள்ள தமிழக வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் அடுத்த போட்டியில் களம் இறக்கப்படுவார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இந்திய அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியான நியூசிலாந்து அணி உடனான போட்டிக்கு தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சியில் ரோகித் சர்மா பயிற்சி செய்யாதது மற்றும் சும்மெனில் பயிற்சி மைதானத்திற்கு வராதது என பலவிதமான குளறுபடிகள்  ஏற்பட்டாலும் மற்ற வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது புதிய குழப்பம் ஒன்று எழுந்துள்ளது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் வரும் சக்கரவர்த்தி இரு வீரர்களும் அடுத்த நடைபெற உள்ள கடைசி லீக் போட்டியான நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்படுவார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்த தொடரின் கடைசி லீப் போட்டி இந்திய அணிக்கு நியூசிலாந்து அணியுடன் மோதும் போட்டி தான், ஏற்கனவே இந்திய அணி நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னேறி உள்ளது. இதன் காரணமாக அடுத்த நடைபெற உள்ள கடைசி போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் முழு நேர சுழல் பந்துவீச்சாளரான வரும் சக்கரவர்த்தி களமிறக்கப்படுவார்களா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் வரும் சக்கரவர்த்தி சிறப்பான பந்துவீச்சு வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இவர் கடைசியாக இந்த தொடரின் அடிப்பட்டியில் இணைந்தார். சுனில் கவாஸ்கர் போன்ற முக்கிய வீரர்களும் வருண் சக்கரவர்த்தி போட்டியில்  கட்டாயம் விளையாட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் அவர் கடைசி லீக் போட்டியில் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram