தமிழ்நாட்டில் 1,046 கிலோமீட்டர் தூரத்திற்கு 48 நெடுஞ்சாலை பணிகள் 38,359 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலை பணிகளானது வருகிற 2027 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், மழைக்காலங்கள் சரியான ஒப்பந்ததாரர்கள் இல்லாத பட்சத்தில் இதற்கான காலம் நீட்டிக்க படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது பெறப்படக்கூடிய சுங்கச்சாவடி கட்டணங்கள் நெடுஞ்சாலைகளுக்காக செய்யப்பட்ட முதலீடுகளை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் நெடுஞ்சாலை பணிக்காக அரசு மற்றும் தனியார் தரப்பில் செலவு செய்யப்பட்ட பணத்தினை திரும்ப எடுத்த பிறகு சுங்கச்சாவடிகள் மூடப்படுமா என்றும் அல்லது இதற்கு வேறு ஏதேனும் தணிக்கைகள் இருக்கிறதா என்றும் திமுக எம்பி நெல்சன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பதாவது :-
முதலில் தோல் என அழைக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடியானது தற்பொழுது பயன்பாட்டு கட்டணமாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் தனியார் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுத்த பின்பு சுங்கச்சாவடியை அரசு தேர்ந்தெடுக்கும் அல்லது கைகாட்டும் வேறொரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பேசிய அவர் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின்படி தான் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் பெறப்படுகிறது என்றும் சுங்கச்சாவடிகளை இழுத்து மூடும் எண்ணமானது தங்களுக்கு ஒருபோதும் கிடையாது என்றும் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக 2008 தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின்படி நெடுஞ்சாலைகளை அமைக்க தனியார் நிறுவனங்கள் செலவழித்த பணத்தினை சுங்கச்சாவடிகளின் மூலம் பெற்ற பிறகு அந்த சுங்கச்சாவடி வேறு ஒரு ஒப்பந்ததாரருக்கு கைமாற்றி விடப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.