பெங்களூர்: வட இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஆட்டோ ஓட்டுநர் செருப்பால் அடித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு உள்ளாக்கியது. ஆட்டோ ஒன்று இருசக்கர வாகனத்தை லேசாக உரசி சென்றதால் ஆத்திரமடைந்து இரு சக்கர வாகன உரிமையாளர் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்திருக்கிறார். பெங்களூரில் பெல்லந்தூர் என்ற பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் இளம் பெண் வந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த ஆட்டோ ஒன்று இருசக்கர வாகனத்தில் உரசி உள்ளது. அதில் ஆட்டோ ஓட்டுனருக்கும், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வட இந்திய பெண்ணுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து தகராறு ஈடுபட்டுள்ளார். தகராறில் ஈடுபட்டதால் வீடியோ எடுத்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர். அதில் ஆத்திரமடைந்த இளம் பெண் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் அந்த வீடியோவில் இளம் பெண் “இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதி இருந்தால் போலீசில் அதற்காக புகாரை செய்து இருக்கலாம் அதை விடுத்து என்னை செருப்பால் அடிப்பது அநியாயம்” என்றும் கன்னடர்களை போல பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் கீழ்த்தரமாக நடத்துகிறார்கள் என்றும் வீடியோவில் கூறியிருக்கிறார். ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் பெல்லந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணையின் போது ஆட்டோ ஓட்டுநர் பெயர் லோகேஷ் (33) மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுனராக அந்த இளம் பெண் பீகாரை சேர்ந்த பங்குரி மிஸ்ரா (28) என்பது தகவலில் தெரியவந்துள்ளது. ஆட்டோ ஓட்டுனர் ஒரு முறையல்ல பலமுறை அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கன்னட அமைப்பினர்கள் மத்தியில் கண்டிக்கத்தக்க செயலாக மாறியது.
இந்த சம்பவம் நடந்த பிறகு ஒரு நாள் கழித்து ஆட்டோ ஓட்டுநர் ஆதரவாளர்கள் இளம்பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்டோ ஓட்டுநர் ஆதரவாளர்கள் மிரட்டியதால் ஆட்டோ ஓட்டுநரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.