செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த திரு நாராயணபுரம் அன்னை சத்யா தெருவை சேர்ந்தவர்கள் சங்கர் செல்வராணி தம்பதிகள் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் செல்வராணி நல்லம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் அப்பார்ட்மெண்டுகளில் துப்புரவு பணி தொடராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வராணி வீடு திரும்பவில்லை என கணவர் சங்கர் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார் செல்வராணி இறுதியாக நல்லமபாக்கத்தை சேர்ந்த குமரேசன் என்ற நபரோடு போனில் பேசுவதை கண்டறிந்தனர் உடலில் போலீசார் சந்தேகத்தின் பெயரில் குமரேசனை பிடித்து தங்களது பாலியல் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி என செல்வராணியின் கணவர் மதுவுக்கு அடிமையாகி அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் நல்ல பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்த குமரேசன் என்பவரோடு செல்வராணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அது திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குமரேசனுக்கு வேறு ஒரு பெண்ணோடு திருமணமாகி குழந்தை இறக்கும் நிலையிலும் குமரேசன் செல்வராணி உடன் தகாத உறவை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வராணிக்கு தனியார் கல்லூரிகள் கார்டன் சூப்பர்வைசராக பணியாற்றி வரும் கோபால் என்பவரிடமும் தகாத உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது இதனை அறிந்து ஆத்திரமடைந்த குமரேசன் செல்வராணிக்கு அடிக்கடி போன் செய்த நிலையில் செல்வராணி ஒரு கட்டத்தில் போனில் அவரது நம்பரை பிளாக் செய்து குமரேசனை புறக்கணித்து இருக்கிறார்.
இதனால் வேறொரு எண்ணில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்ட குமரேசன் தனது மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாக கூறி செல்வராணி நம்ப வைத்து கடந்த மூன்றாம் தேதி பைக்கில் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று இருக்கிறார் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு சென்ற பின்னர் செல்வராணி அணிந்திருந்த துப்பட்டாவால் ஆத்திரம் தீரும் வரையில் கழுத்தை நெரித்து குமரேசன் கொலை செய்திருக்கிறார்.
பின்னர் செல்வராணியின் உடலை அங்கேயே விட்டுவிட்டு குமரேசன் புறப்பட்டு சென்றது தெரிய வந்தது தகவல் அறிந்து வந்த போலீசார் குமரேசனை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் குமரேசனை கைது செய்த போலீசார் செல்வராணி இடம் தவறான உறவில் இருந்த கோபாலிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்