கேரளம் மாநிலம் கன்னூர் மாவட்டம் பயங்கடி பகுதியில் நடந்த துயரமான சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 30 வயதான ரீமா என்ற பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தனது 3 வயது மகனுடன் தனியே வாழ்ந்து வந்தார். குடும்பத் தகராறு காரணமாக கணவரிடமிருந்து விலகி, உறவினர்களுடன் தொடர்பு இல்லாமல் வாழ்ந்துள்ளார். இவர் மிகுந்த மன உளைச்சலுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் தனது மகனை அழைத்துக்கொண்டு ரீமா ஸ்கூட்டரில் பயங்கடி பகுதியில் உள்ள ஒரு ஆற்றுப் பாலத்திற்கு சென்றார். அங்கு சென்றதும், தன்னுடன் இருந்த தனது மூன்று வயது மகனுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் இரவு நேரத்தில் நடைபெற்றதால், அருகில் உள்ளவர்கள் யாரும் கவனிக்கவில்லை. இருவரும் ஆற்றில் மூழ்கிய செய்தி அறிந்ததும் மீட்புப்படை அங்கே விரைந்து சென்று தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தேடுதல் பணியின் போது, ரீமாவின் சடலம் மீட்கப்பட்டது. ஆனால், அவரது சிறுவனின் உடல் இதுவரை காணப்படவில்லை. சிறுவனின் உடலை கண்டுபிடிக்க தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாயின் மன அழுத்தம், குடும்ப பிரச்சனை மற்றும் தனிமை ஆகிய காரணங்கள் இத்தகைய ஒருவிதமான முடிவை எடுக்க அவரைத் தள்ளி இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் பயங்கடி பகுதியை மட்டுமல்லாமல், நாடெங்கும் உள்ள மக்களை வேதனையிலும் சிந்தனையிலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு தாயின் மன துயரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கான இன்னொரு வேதனையான எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட போலீசார் விசாரணையை தொடங்கி, குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், தனிமை, மன அழுத்தம் போன்ற கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.