இன்று உலக மகளிர் தினம். மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்ற பழமொழிக் கிணங்க பல பெண்களும், அவரவர் துறைகளில் முன்னேறி வந்து கொண்டு இருக்கின்றனர். பல பெண்கள் வீட்டை விட்டு, வீட்டு சூழல் காரணமாக வெளிவராவிட்டாலும், அவர்களால் வீட்டில் இருந்து என்ன வேலை செய்ய முடியுமோ அதில் கவனம் செலுத்தியும் வருகின்றனர். இன்றைய காலத்தில் பெண்கள் ஒரு படி மேலாகவே செயல்பட்டு வருகின்றனர் என்பது மாற்ற முடியாத கருத்து.
இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் பெண் சுதந்திரம் உள்ளதா? என்பது கேள்விக்குறியே! பெண்கள் செய்ய விரும்பியதை எல்லாம் செய்ய அவர்களுக்கு உரிமை வழங்கப்படுவது போல், செய்ய விரும்பாததையும் செய்யாமல் இருக்க உரிமை உள்ளதா! என்பது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். இன்றைய காலகட்டங்களில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் கூட பாலியல் வன்முறையில் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். பெண்களின் உடையை குற்றம் சொல்பவர்களே, சிறு மாணவ குழந்தைகள் உடையில் என்ன குறை கண்டுள்ளீர்! பெண்கள் அணியும் உள்ளாடை முதல் வெளி தோற்றம் வரை அவர்கள் மிகவும் கவனமாக செலக்ட் செய்து உடை அணிகிறார்கள்.
அவர்களுக்கு இருக்கும் உடை திணிப்பு உங்களுக்கு ஒருபோதும் கிடையாது! கோடை காலங்களில் அவர்களின் நிலை என்னவென்று உங்களால் ஒருபோதும் கணிக்க இயலாது! பெண்களை சக தோழிகளாக, சகோதரிகளாக, மனிதர்களாக மதிக்கும் ஆண்களின் மத்தியில் நீங்களும் அவர்களுக்கு நிகரானவர்கள் என்று கூறிக் கொள்வது வேதனை அளிக்கிறது. பெண்கள் ஒரு சகாப்தம்! அவர்களை தோழனாக வழிநடத்தி செல்லும் ஆண்களுக்கு பெண்கள் எப்பொழுதும் அடிமைகளே!! தற்சமயம் வரை பெண் சுதந்திரம் என்பது வானில் உள்ள நட்சத்திரம் போலவே! பேச, பார்க்க அழகாக உள்ளது. ஆனால், கையிக்கோ எட்டாத கனி! இதுவே நிதர்சன உண்மை.