சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் ரேஷன் அட்டைகளை கொண்டு பொருட்கள் வாங்கி பயன் பெற்றுள்ளனர். அதில் ஒரு கோடியே 14 லட்சம் பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை கிடைத்துள்ளது. இதுவரை கணக்கீட்டின்படி ஒரு கோடியே 63 லட்சம் பேர் கலைஞர் உரிமைத் தொகையின் மூலம் பயன் பெற்று வந்த நிலையில் சுமார் 50 லட்சம் பேருக்கு இன்னும் உரிமை தொகை கிடைக்காமல் உள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் குடும்பத் தலைவிகளின் வங்கிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வங்கியில் வரவு வைக்கப்படுகிறது. அதன்படி மீதமுள்ள குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
அனைத்து குடும்பங்களும் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற அரசு தரப்பில் சில தகுதிகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அதன்படி ரூ 2.5 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும், ஐந்து ஏக்கருக்கு குறைவான நன்செய் நிலங்கள் வைத்திருப்பவர்கள் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலங்கள் வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் உரிமை தொகை வழங்கப்படும்.3600 யூனிட்டுக்கும் குறைந்த வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பத்தினருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும், விதவை உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் உதவித்தொகைகள் வாங்காத குடும்பத்திற்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது.
நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்காத குடும்பத்திற்கு உரிமை தொகை வழங்கப்படும், மேலும் குடும்பத்தில் ஒருவர் கூட வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவராக இருத்தல் கூடாது போன்ற நிபந்தனைகள் தமிழக அரசு தரப்பில் தெரிவித்திருந்தது. நான்கு சக்கர வாகனம் வைத்து எல்லாம் குடும்பங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்யும் உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்கள் ஆகியவற்றிற்கு உரிமை தொகை வழங்கப்படவில்லை.
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு இருந்தாலும் சில குடும்பங்களில் இந்த ஊக்கத்தொகை சென்றடையவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் பயன்பெறும் வகையில் வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யலாமா என தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.
அதன்படி குடும்பத்தில் இரண்டு பேர் மாதத்திற்கு 12,000 சம்பளம் வாங்கினால் 2.5லட்சத்தை தாண்டி விடும் இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆண்டு வருமானம் ரூ 2,50,000 என்பதனை ரூ.3 லட்சம் அல்லது ரூ.4 லட்சம் ஆக உயர்த்தலாமா? என தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் இதுவரை உதவித்தொகை பெறாத குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.