சுங்கச் சாவடியில் இயங்கும் ஆப்ரேட்டர்கள் தவறான உள்ளீடுகளாலும், தொழில்நுட்ப கோளாறுகளாலும், ஒரே வாகனத்திற்கு இரு முறை கட்டணம், க்ராஸே ஆகாத வாகனத்திற்கு கட்டணம் ஆகியவை Fastag-ல் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள். உங்களது Fastag கணக்கில் இருந்து தவறாக அல்லது கூடுதலாக பணம் பிடிக்கப்பட்டு இருந்தால் உடனே புகார் அளிக்குமாறு NHAI ஆல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய நெடுஞ்சாலைத்துறை Fastag செயலிக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து தான் உள்ளது.
அதையும் மீறி அவ்வப்போது நடைபெறும் இந்த தவறான பண பிடித்தம் தொடர்பாக அந்நிறுவனம் பிரச்சனையில் சிக்கிக் கொண்டு தான் வருகின்றது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையமும்(NHAI) பல கண்டிஷன்களை விதித்துள்ளது. இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (IHMCL) சுங்க கட்டண ஆப்பரேட்டர்களுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் அவதாரம் விதித்துள்ளது. இந்த கண்டிஷனுக்கு பிறகு பல தவறுகள் நிறுத்தப்பட்டு இருந்தன. எனினும் சுங்கச்சாவடிகளில் அதிக அளவு பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் ஒரு நாளைக்கு மினிமம் 50 வழக்குகளாவது தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. பயனர்கள் இது குறித்து விழிப்புணர்வாக இருக்கும் படி எடுத்துரைத்துள்ளது.
தொலைபேசி 1033 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். falsededuction@ihmcl.com என்ற மின்னஞ்சலுக்கு கம்ப்ளைன்ட் ரைஸ் செய்யலாம். புகார் பெறப்பட்ட குறுகிய காலத்தில் IHMCL சரி பார்த்து உரிய தொகையை மீண்டும் உரியவர்களுக்கு அனுப்பி வைத்து விடும். புகார் அளிக்க தேவையான ஆவணங்கள் பரிவர்த்தனை ஐடி, பயணம் செய்யப்பட்ட நேரம், நாள், வண்டி எண் ஆகியவற்றை வைத்து பாஸ்ட்ராக் வாடிக்கையாளர் தளத்தில் கூட புகார் அளிக்கலாம் என்று அதிரடி தகவல் வெளியிட்டுள்ளது.