யஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!! ‘TOXIC’ ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு.. புதிய தேதி இதுதான்!!

Yash, Toxic Movie, Release Postponed, Middle East War, Cinema News Tamil.

கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டத் திரைப்படம் ‘டாக்ஸிக்’ (Toxic). கேஜிஎஃப் படத்திற்குப் பிறகு யஷ் நடிக்கும் படம் ன்பதால் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிரடியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய ரிலீஸ் தேதி: முதலில் இப்படம் வரும் மார்ச் 19, 2026 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நிலவும் சில தவிர்க்க முடியாத காரணங்களால், படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் 4, 2026-க்கு படக்குழு மாற்றியுள்ளது. கோடை விடுமுறை சமயத்தில் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

காரணம் என்ன? இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் ஒரு சீரியஸான காரணம் இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. யஷ் போன்ற ஒரு பெரிய ஸ்டாரின் படம் உலக அளவில் ஒரே நேரத்தில் வெளியாக வேண்டும் என்பதால், சர்வதேசச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், படத்தின் கிராபிக்ஸ் (VFX) பணிகளுக்குக் கூடுதல் காலம் தேவைப்படுவதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. “தரமான படைப்பைக் கொடுக்கவே இந்தத் தாமதம்” என ரசிகர்கள் தங்களைத் தேற்றிக் கொண்டு வருகின்றனர். ஜூன் 4-ஆம் தேதி ‘டாக்ஸிக்’ சம்பவம் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram