தமிழக அரசு மக்கள் அனைத்து துறைகளிலும் பலன் பெற வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நிலத்தின் உரிமையாளர்கள் தங்களுடைய நிலங்களை அளவீடு செய்வதற்கு நேரடியாக அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் ஆன்லைன் மூலமாக வீட்டிலிருந்து படி நில அளவீடுக்கு விண்ணப்பிக்கக்கூடிய வசதியை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பதாவது :-
இனி பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுடைய நில அளவீடுகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான கட்டணங்களையும் ஆன்லைனிலேயே செலுத்துவதற்கான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், நில அளவீடுக்காக வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் httstamilnilam.tn.gw.incitizen என்ற அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்தின் மூலம் உங்களுடைய நிலத்தின் விவரங்களை உள்ளீடு செய்த விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
செல்போன்கள் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் அவர்களுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய இ சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பதிவு செய்த பின் எந்த தேதியில் நில அளவீடு செய்யப்படும் என்பது குறித்த விவரங்கள் எஸ்எம்எஸ் ஆக அல்லது போன் கால் மூலமாக தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நில அளவீடு செய்த பின் மனுதாரர் மற்றும் நில அளவீடு செய்தவர் ஆகியவரின் உடைய கையொப்பம் விடப்பட்ட அந்த அறிக்கையானது அப்லோட் செய்யப்படும் என்றும் அதனை பயனர்கள் hts eservicestngwin என்ற இணைய வழியின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் உடைய இந்த இணைய வழி நில அளவீடை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார்.