பீட்ரூட் லிப் பாம் இயற்கை முறையில் வீட்டிலேயே செய்யலாம் :
பெண்கள் தங்கள் உதடுகளை வறட்சி ஆகாமல் பார்த்துக் கொள்ள லிப் பாம் பயன்படுத்தி வருகிறார்கள், அதற்காக கடையில் காசு கொடுத்து அதிக விலையில் வாங்காமல் வீட்டிலேயே இயற்கையான முறையில் லிப் பாம் தயாரிக்கலாம், கடையில் வாங்கி பயன்படுத்தும் லிப் பாம் எல்லோருக்கும் ஒற்றுப் போவதில்லை அதில் ரசாயனங்கள் அதிகமாக கலப்பதால் அதை பயன்படுத்தும் பெண்கள் உதடு நாளடைவில் கருமையாக மாறிவிடுகிறது.
பெண்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கையான முறையில் லிப் பாம் தயாரித்து பயன்படுத்தினால் அழகான மென்மையான உதடுகளை பெறலாம் இப்போதெல்லாம் வரும் லிப் பாம் அதிக அளவு நிறமிகளை இருக்கிறார்கள், ஆனால் நாம் நம் வீட்டில் இருக்கும் பீட்ரூட்டை கொண்டு லிப் பாம் செய்யலாம், இதற்கு.
தேவையான பொருட்கள் :
* பீட்ரூட் -1
* நெய் ஒரு டீஸ்பூன்
* வேஸ்லின் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பீட்ரூட்டை முதலில் நன்கு அலசி விட்டு பின் அதன் தோள்களை சீவி, மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து சாறு எடுக்க வேண்டும்,பின் அடுப்பில் ஒரு கடாயில் தண்ணீரை ஊற்றி பின் அதன் மேல் ஒரு கிண்ணத்தை வைத்து அதில் பீட்ரூட் சாறு சேர்க்கவும் அதை நேரடியாக அடுப்பில் வைத்து செய்யாமல் டபுள் பாய்லிங் மெத்தடில் செய்தால் நன்றாக இருக்கும், அந்தச் சாறு நன்றாக அடுப்பில் வைத்து காய்ச்சவும் பின்பு அதில் நெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக காய்ச்சவும், அதன் பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் வேஸ்லின் கலந்து அவை உருகிய பிறகு ஒன்று சேர்ந்து வந்துவிடும் அதை ஒரு ஏர்டைட் கண்டெய்னரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் வீட்டிலேயே இயற்கையான முறையில் பீட்ரூட் லிப் பாம் செய்து பயன்படுத்த முடியும்.