கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்பது தமிழ்நாடு அரசின் ஒரு முக்கிய நலத்திட்டம் ஆகும் இது தகுதியுடைய குடும்ப தலைவிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம். இந்த திட்டம் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்துவதையும் அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலருக்கும் இந்த மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணம் ஒன்று உள்ளது அதை சரி செய்யும் பட்சத்தில் கட்டாயமாக பலர் பயன்பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. முதலில் மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து தெளிவு பெற வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதி இல்லாதவர்கள் :-
✓ ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் உள்ள குடும்ப தலைவி
✓ வருமானவரி அல்லது தொழில் வரி செலுத்துபவர்கள்
✓ மாநில அல்லது மத்திய அரசு ஊழியர்கள் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களின் ஓய்வூதியதாரர்கள்
✓ சொந்த பயன்பாட்டில் கார் ஜீப் டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள்.
மேல் கூறப்பட்டவர்களை தவிர மற்ற அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பொழுது முக்கியமாக கொடுக்கப்படக்கூடிய ஆவணங்களை சரி பார்க்க வேண்டும். அதன் பின் செல்போன் நம்பர் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் கணக்கு விவரங்கள் கொடுக்கும் பொழுது மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
வங்கி கணக்கும் செல்போன் என்னும் இணைக்கப்பட்டிருத்தல் மிகவும் அவசியமான ஒன்று. இவை தவறும் பட்சத்தில் மகளிர் உரிமைத் தொகை காண குறுஞ்செய்தி வருமே தவிர அதற்கான பணமானது வங்கி கணக்குகளில் வராது. எனவே மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து கொடுப்பது மிகவும் முக்கியமான ஒன்று.