மும்பை: மும்பையை அடுத்த நவிமும்பை கார்கர் பகுதியில் கடந்த ஜூலை 20ஆம் தேதி ரீல்ஸ் மோகத்தால் ஓடும் கார் மீது ஏறி நின்று இளம்பெண் ஒருவன் நடனமாடியுள்ளார். இளம் பெண் ஒருவர் “ஆரா பார்மிங்” என்ற சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். ஓடும் காரின் மீது ஏறி நின்று இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக வேண்டும் என்பதற்காக உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சாகசத்தில் பல பேர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் ஓடும் காரின் மீது ஏறி நின்று “ஆரா பார்மிங்” என்ற சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றன.
இது குறித்து வலது பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சமூக வலைதள பிரபலமான நாஷ்மின் சுல்டே என்பது தெரிய வந்தது. மேலும், அந்தக் காரை ஓட்டி வந்தவர் அவரது ஆண் நண்பர் அல்பேஷ் சேக் என்பதும் தெரிய வந்தது. காரின் மீது ஏறி நின்று நடனம் ஆடுவது தொடர்பாக இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தோனேசியாவை சேர்ந்த 11 வயது சிறுவன் வேகமாக செல்லும் படகின் முன்பு ஏறி நின்று வேடிக்கை காட்டிய வீடியோ வைரலாகிய நிலையில் பலரும் ஆரா பார்மிங் சாகசத்தில் ஈடுபட்டு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன. ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற ஆபத்தான முறையில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருபவர்களை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.