சேமிப்பு வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வங்கி அபராதம் விதித்து வசூலித்து வந்திருந்தது. தனியார் வங்கிகள் முன்கூடியே இதனை ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஆக மாற்றிய நிலையில், தற்சமயம் பொதுத்துறை வங்கிகளும் இதற்கு விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. தனியார் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் மற்றும் மணி ரொட்டேஷன் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மினிமம் பேலன்ஸ் செக்யூரிட்டி ஜீரோவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும்பாலும் தனியார் வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்கவே முற்படுகின்றனர். அரசு பொது வங்கிகளை இதனால் குறிப்பிட்ட விகித மக்கள் மட்டுமே நாடி வருகின்றனர். தற்சமயம் இதில் விலக்கு அளித்து மன்த்லி டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்கும் போது ரொட்டேஷன் ஷிப்ட் கணக்குகளை இதற்கு பதிலாக மாற்றி அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனால் மற்ற வங்கி ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கட்டுப்பாடு இருப்பதை போன்று பொதுத்துறை வங்கிகளிலும் மாற்றி அமைக்கப்பட உள்ளது என்று பொதுத்துறை வங்கிகள் கலந்து ஆலோசித்து வருகின்றன. ஒரு மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் டெபிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால் தனியார் வங்கிகளில் அதற்கென்று தனி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமே அது ஜீரோ பேலன்ஸ் கொடுக்க முடிகிறது. அதை தற்போது பொதுத்துறை வங்கிகளும் நடப்பில் கொண்டு வந்தால் ஏடிஎம்மில் குறிப்பிட்ட முறைதான் பணத்தை எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடுக்குள் பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்களும் வர வேண்டிய நிலை ஏற்படும்.