cricket: இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் டெஸ்ட் போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
பிப்ரவரி 19 தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. குரூப் ஏ பிரிவில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்திய அணியில் தற்போது சுப்மன் கில் ஒரு தவிர்க்க முடியாத முக்கிய வீரராக மாறியுள்ளார் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஏனெனில் அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனால் அதன் பின் இவர் தற்போது விளையாடி வரும் மாற்றத்திற்கு காரணமாக ஒரு முக்கிய வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அவ அவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் வசீம் ஜாபர் இவர் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த பின் கில் ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடினார். அப்போது பயிற்சியாளராக வசீம் ஜாபர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் சில நுணுக்கங்களை சொல்லி கொடுத்ததாகவும் அவர் கூறிய பிழைகளை அவர் நன்கு கருத்தில் கொண்டு தனது ஃபார்மை மீட்டெடுத்தாகவும் சமீபத்தில் வசீம் ஜாபர் கூறியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி 147 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.